ஒரு நாளைக்கு 4 லட்சம்!! நடிகை ஷகீலாவின் வாழ்க்கையே போக இவர் தான் காரணம்..
மலையாள திரைத்துறையில் 90ஸ் காலக்கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஷகீலா. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த ஷகீலா பல ஆண்டுகள் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கான பெயரை மாற்றினார்.
அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியப்பின் யூடியூப் சேனல் நடத்தியும் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார். அப்படி சமீபத்தில் அவரளித்த பேட்டிகள் வைரலாகியது. தற்போது விக்கிபீடியாவில் தனக்கு சொந்தமாக வீடு, பி எம் டபிள்யூ கார் இருப்பதகாவும் கூறப்பட்டு இருப்பது எல்லாம் பொய்.
நான் 40 வருடமாக வாடகை வீட்டில் வசித்து தான் வருகிறேன் என்றும் ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளமாக வாங்கிய காலமெல்லாம் இருந்தது. நடிப்பு மூலம் நிறைய சம்பாதித்தேன். ஆனால் அதையெல்லாம் என் சகோதரி எடுத்து சென்றுவிட்டார்.
வீட்டில் காசு வைத்தால் வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிவிடக் கூடும் என்று கூறி பத்திரமாக வைத்து கொள்கிறேன் என்று எடுத்துச்சென்று ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஷகீலா. தற்போது மறுபடியும் நான் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்குகிறேன்.