குடிக்க ஆரம்பிச்சதே அதுக்கு தான்.. நிறுத்தவே முடியல!! அனுராதா முன்பே நடிகை ஷகீலா சொன்ன காரணம்..
நடிகை ஷகீலா
90ஸ் காலக்கட்டத்தில் கவர்ச்சி கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஷகீலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது பல பேட்டிகளில் கலந்து கொண்டும் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார். சமீபத்தில் நடிகை அனுராதாவுடன் சேர்ந்து ஒரு பேட்டிக்கொடுத்திருக்கிறார்.
அதில் குடிக்கு அடிமையானதற்கு என்ன காரணம் என்று தெரிவித்துள்ளார். ஷகீலாவுக்கு என்ன அட்வைஸ் சொல்லணும் என்றால் அது என்ன என்ற கேள்விக்கு அனுராதா, 7 மணிக்கு மேல் அவளுக்கு கால் செய்யலாம் என்றால் நான் யோசிப்பேன்.
சரக்கடித்தால் இங்கிலீஷ்லயே பேசுவாள். சரக்கடித்தால் இங்கிலீஷ் தான் வரும். சிலர் காலையில் இருந்து சரக்கு அடிக்கும் ஆள் கிடையாது என்று கூறியிருக்கிறார். இதற்கு ஷகீலா, அதை விட முடியலன்னு ஃபீல் பண்ணல, விடமுடியல அதுல்ல என்ன ஃபீல் பண்ணுறது.
விடவே முடியலையே, குடி நம்மை குடிக்காமல் இருந்தால் சரி. மேலும் பேசிய ஷகீலா, நான் மன அழுத்தத்தில் இருக்கும் போது குடிக்கவில்லை. சும்மா ஒரு ஸ்டைலுக்கு குடிக்க ஆரம்பித்தேன். மன அழுத்ததால் நான் குடிக்க ஆரம்பிக்கவில்லை என்று ஷகீலா பகிர்ந்துள்ளார்.