2025-ல் 2-வது கல்யாணத்தை முடித்த தமிழ் நடிகைகள்!! யார் யார் தெரியுமா..
2025ல் 2-வது திருமணம்
சினிமா பிரபலங்கள் தங்களில் பிஸியான தருணங்களில் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யோசித்து சில விஷயங்களை செய்வார்கள். அப்படி 2025ல் பல நட்சத்திரங்கள் திருமணம், விவாகரத்து என்று தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை செய்துள்ளனர். அப்படி 2025ல் இரண்டாவது திருமணம் செய்த நடிகைகள் யார் யார் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்..
நடிகைகள் யார் யார்

சீரியல் நடிகையாக இருந்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாவ்னி ரெட்டி, ஏற்கனவே திருமணமானாவர். கணவர் இறந்தப்பின் தனியாக இருந்த பாவ்னி, பிக்பாஸில் அமீரை காதலித்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ரகசிய காதலர் வசி சச்சி என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை சம்யுக்தா ஷான், முன்னாள் கிரிக்க்ட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் கால் பதித்த நடிகை சமந்தா, தி ஃபேமிலி மேன் 2 படத்தின் இயக்குநர் ராஜ் நிதிமொருவை டிசம்பர் 12 ஆம் தேதி காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.