நடிகையை திருமணம் செய்து ஷார்ஜாவின் அம்போனுவிட்ட கணவர்! வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஷகிலா

Cooku with Comali Shakeela
By Edward Apr 26, 2022 04:00 PM GMT
Report

மலையாள சினிமாவில் க்ளாமர் நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஷகிலா. ஆர்மபத்தில் குடும்ப சூழ்நிலையால் சினிமாவில் அந்தமாதிரி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அந்த மாதிரி நடிகை என்ற பெயரோடு இருந்த ஷகிலாவிற்கு மாற்றத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். போட்டியாளராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

இதன்பின் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து பிரபலங்களை பேட்டி எடுத்து வீடியோவை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகை சர்மிளாவை பேட்டியெடுத்து பல ரகசிங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஷகிலாவுக்கும் சர்மிளாவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குளிர் காத்து என்ற படத்தில் சர்மிளா நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஷகிலாவின் காட்சிகளை மட்டும் சேர்த்ததால் ஷகிலா மீது கோபத்தில் இருந்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்குபின் ஷகிலா, உனக்கு எத்தனை கணவர் இருக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.

16 வயது இருக்கும் போது நான் படித்துக்கொண்டிருக்கும் போதே ரகசியமாக பாபு ஆண்டனி என்பவருடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது பாபு ஆண்டனி எனக்கு உதவினார்.

நான் சம்பாதித்த ஒருசில சொத்துக்களையும் அவருக்கு 17 வயசு இருக்கும் போதே குடும்பத்திற்கு தெரியாமல் பாபு ஆண்டனிக்கு கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதன்பின், எனக்கு இரு திருமணங்கள் நடைபெற்றது. முதல் கணவர் கிஷோர் சத்யா, இரண்டாம் கணவர் ராஜேஷ். இருவருடனும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன்.

நான் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்து கொண்ட போது கிஷோர் சத்யா எனக்கு ஆறுதலாக பேசுவதுபோல் நடித்தார். அப்பா, அம்மா பார்த்து தான் கிஷோர் சத்யாவை கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.

என்னை ஷார்ஜாவிற்கு கூட்டிக்கொண்டு செனறு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து விட்டு ஓடிவிட்டார். அதனால் இந்தியாவில் நான் 4 வருடங்களாக தனியாக இருந்தேன். பின் தான் நான் அவரை விவாகரத்து செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் போதைபொருள் அடிக்டாகியது பொய்யான செய்தி என்று கூறியுள்ளார் நடிகை சர்மிளா.