நான் கொரோனாவால் இறந்தேனா? மரணம் குறித்து அதிர்ச்சியான சக்திமான் நடிகர்..

coronavirus mukesh khanna shaktimaan
By Edward May 13, 2021 10:00 AM GMT
Report

90களில் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் ஒருசில வீட்டில் தான் இருக்கும். அப்படி முக்கியமாக ஈர்த்த தொடர்களை அனைவரும் யார் வீட்டில் டிவி இருக்கிறது அங்கே சென்று பார்ப்போம். அப்படியாக 90ஸ் கிட்ஸ்களின் பேபரேட் தொடராக இருந்தது சக்திமான் தொடர்.

1997ல் ஒளிப்பரப்பாகிய இந்த தொடர் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வெற்றி பெற்றது. அதில், சக்திமானாக நடிகர் முகேஷ் கண்ணா நடித்து பெரியளவில் பேசப்பட்டார். இதன்பின் சில படங்களிலும் நடித்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் இறந்ததாக வதந்தி செய்திகள் இணையத்தில் பரவியது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த முகேஷ் கண்ணா, தான் நலமுடன் இருக்கிறேன், உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.