நடிகைகள் பப்ளிக் ப்ராபர்ட்டி.. பயில்வானை வெளுத்து வாங்கிய கவர்ச்சி கன்னி ஷகிலா
சினிமா நட்சத்திரதிரங்களை பற்றி கண்டமேனிக்கு கேவலமாக விமர்சித்தும் நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை எல்லை மீறிய வார்த்தைகளில் பேசியும் வருபவர் பத்திரிக்கையாளர் பயில்வான். இதுகுறித்து பலர் பயில்வானை திருட்டி கண்டித்தும் வருகிறார்கள்.
சமீபத்தில் கூட நடிகை ராதிகா பொதுவெளியில் செருப்பால் அடித்தும், ரேகா நாயர் கேவலமாக சண்டை போட்டுமிருந்தார். இந்நிலையில், நடிகை ஷகிலா பயில்வானை பேட்டி எடுத்து வெளுத்து வாங்கியிருக்கிறார்.
நடிகைகள் பப்லிக் ப்ராபர்ட்டி என்று கூறியதற்கு பொறுமையை இழந்த ஷகிலா, பல பத்திரிக்கைகளில் சொல்வது, சிலரிடம் கேட்டதை வைத்து தான் கூறுகிறீர்கள். அதற்கான ஆதாரம் உங்களிடம் இல்லை என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.
மேலும், நடிகை கஸ்தூரி ஒரு ஆண் என்று விமர்சனம் செய்ததையும் குறி செருப்பால அடித்தது போல் கேட்டுள்ளார். இதனால் சற்று குழப்பத்துடன் என்ன சொல்வது என்று முழித்த பயில்வான் நான் தெரியாமல் கூறினேன். அதை எடிட் செய்யாமல் போட்டு விட்டார்கள் என்று சமாளித்துள்ளார்.