தற்கொலை எண்ணம் வருகிறது, நான் தவறு செய்யவில்லை... புலம்பும் சின்னத்திரை பிரபலம்
ஷாலின் சோயா
மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக, பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷாலின் சோயா. இவர் தமிழ் பக்கம் வந்தவர் TTF வாசன் காதலி என மிகவும் பிரபலமானார்.
அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார், ஆனால் இடையிலேயே எலிமினேட் ஆனார்.
தற்போது மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி மூலம் பலர் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.
அப்படி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு, செய்த அநாகரீக செயலைப் பற்றி நடிகை மினு முனீர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.
இந்த நிலையில் அவருடன் ஷாலின் சோயா எடுத்த பழைய டிக்டாக் வீடியோ வைரலாகிறது, அவருடன் சோயா அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து சோயா தனது இன்ஸ்டா பதிவில், அந்த வீடியோ பல வருடம் முன் எடுக்கப்பட்டது, அந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இங்கு உண்மையில் பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன்.
ரசிகர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில் இந்த கமெண்ட்டுகளை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது என சோகமாக பதிவிட்டுள்ளார்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.