வாய்ப்பிற்காக வீட்டைவிட்டு ஓடி வந்த விஜய் பட நடிகை! உருக்கமாக கூறிய உண்மை.

Shalini
By Edward Apr 21, 2022 04:26 AM GMT
Report

சினிமாவில் நடித்து எப்படியாவது முன்னணி நட்சத்திரமாக வேண்டும் என்று பலர் ஏங்கி வருவார்கள். அதிலும் நடிகையாக பல இளம்பெண் வீட்டினை எதிர்த்து சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்ற நோக்கில் வருவார்கள். அப்படி ஒரு நிலையில் தான் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை ஷாலினி பாண்டே.

சமீபத்தில், மேடையில் பேசிய ஷாலினி பாண்டே தான் நடிப்புக்காக வீட்டை விட்டு ஓடிவந்தது பற்றி கூறினார். அப்பா நான் எஞ்சினியரிங் படிக்கவேண்டும் என விரும்பினார், அவருக்காக படிக்க தொடங்கினேன், ஆனால் ஒருகட்டத்தில் இது எனக்கானதல்ல என உணர்தேன்.

நான் நடிகையாக வேண்டும் என நான்கு வருடங்களாக அப்பாவை convince செய்ய முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. "வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டேன். தற்போது அவர்கள் என்னை பற்றி பெருமையாக நினைப்பார்கள்" என அவர் கூறினார்.

அர்ஜுன் ரெட்டி மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அவர். அதற்கு பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா உள்ளிட்ட பட படங்களில் நடித்தார் அவர். ஆனால் அவை ஷாலினிக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தியில் ரன்வீர் சிங் ஜோடியாக Jayeshbhai Jordaar என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.