அஜித் குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்.. காதல் மனைவி வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ்

Ajith Kumar Tamil Cinema Tamil Actors
By Bhavya May 01, 2025 11:30 AM GMT
Report

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது.

அஜித் குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்.. காதல் மனைவி வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ் | Shalini Photos With Ajith Kumar Goes Viral

சர்ப்ரைஸ் போட்டோஸ் 

இந்நிலையில், பத்மபூஷன் விருது பெற்ற அஜித் குமார் இன்று அவரது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இதன் காரணமாக, அவருடைய காதல் மனைவி ஷாலினி கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஆண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.