68 வயது நடிகருடன் அஜித் மனைவி ஷாலினி!! வைரலாகும் புகைப்படம்..
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி. 1997ல் காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அஜித்தின் அமர்களம் படத்தில் அவர்க்கு ஜோடியாக நடித்த ஷாலினி அவருடன் காதலில் இருந்தார். பின் 2000 ஆம் ஆண்டு அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி இரு குழந்தைகளை பெற்று குடும்பத்தை பார்த்து வருகிறார்.
ஷாலினியை போல் அவரது தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர் ரிஷியும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பிரபலமானவர்கள் தான். நடிகை ஷாமிலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
தற்போது 68 வயதான மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். குழந்தை நட்சத்திரமான அவருடன் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சேர்த்து இணையத்தில் ஒரு பதிவாக பகிர்ந்துள்ளார் நடிகை ஷாமினி.
![Gallery](https://cdn.ibcstack.com/article/f874b2cb-ab77-4d0b-84ef-0ba2ab6ee0df/24-66627dda2df2f.webp)