அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.. எங்கு இருக்கிறார் தெரியுமா..
1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி. தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி.
பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஷாமிலி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
மேலும், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஷாமிலி நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை - பெங்களூர் அணிகள் ஆடிய ஆட்டத்தை சேப்பாக்கத்திற்கு சென்று தன்னுடைய அக்கா ஷாலினி மற்றும் சகோதரர் ரிச்சர்ட்-யுடன் பார்த்துள்ளார். அவர்கள் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.


