நடிகர் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது! எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
Shalini
Shamlee
By Kathick
துர்கா, அஞ்சலி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஷாமிலி. இவர் நடிகை ஷாலினியின் தங்கை ஆவார்.
கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், தெலுங்கில் வெளியான Oy! படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர சிவாஜி படம்தான் இவருக்கு தமிழில் முதல் லீட் ரோல் ஆகும்.
இதன்பின் சினிமாவிலிருந்து விலகியே இருக்கும் ஷாமிலி, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டி வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஷாமிலி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம அஞ்சலி பாபாவா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..







