பொது இடத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறி நடந்த மர்ம நபர்கள்.. பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பு
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் ஷாலு சவுதாசியா. இவர் 2019 -ம் ஆண்டு வெளியான "என் ஆள் சீன் போடுற" என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் படுதோல்வி அடைந்தது.

அத்துமீறிய செயல்
இவர் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள பார்க்கில் வாக்கிங் செல்லும் போது இவரை மரம நபர்கள் பாலத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது ஷாலு கத்தி கூச்சலிட்ட பிறகு அந்த நபர்கள் அங்கு இருந்து சென்றனர்.
சமீபத்தில் ஷாலு சவுதாசியா வாக்கிங் செல்லும் போது இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். இதனால் இவர் அந்த இளைஞர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
இளைஞரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர், "நான் நடிகையை பின் தொடரவில்லை" என்று கூறியுள்ளார்.
அதனால் அங்கு இருந்து cctv கேமராவில் பதிவானதை வைத்து பார்த்தால் அந்த நபர் அந்த நடிகையை பின் தொடரவில்லை என்று தெரியவந்தது.
கடந்த ஆண்டு ஷாலு சவுதாசியாவிற்கு ஏற்பட்ட பிரச்சனையால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மனநிலை மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
