ஒருவேலை சாப்பாட்டுக்கு திண்டாடும் நிலை!! நடுத்தெருவுக்கே வந்த இயக்குனர் சங்கரின் அசிஸ்டெண்ட்..

Shankar Shanmugam
By Edward Mar 24, 2023 09:24 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். இவரிடம் பல உதவி இயக்குனர்கள் பணியாற்றி முன்னணி இயக்குனர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

ஒருவேலை சாப்பாட்டுக்கு திண்டாடும் நிலை!! நடுத்தெருவுக்கே வந்த இயக்குனர் சங்கரின் அசிஸ்டெண்ட்.. | Shankar Assistant Selvendran Latest Sad Situation

அப்படி செல்வேந்திரன் என்ற உதவி இயக்குனர் நடுத்தெருவுக்கு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சினிமாவை நம்பி சொந்த ஊரைவிட்டு வாய்ப்பு தேடி வந்தவரில் ஒருவர் செல்வேந்திரன்.

ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் நடிகை லட்சுமி ராயை அறிமுகப்படுத்தியவர் தான் இவர். கோவையில் இருந்து வந்த இவர், காதலன் , இந்தியன், ஜீன்ஸ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி தனியாக ஒரு படத்தினை இயக்க ஆரம்பித்தார்.

படம் தோல்வியை அடைந்ததால் வாய்ப்பில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து செல்வேந்திரன், சங்கரை நான் பார்த்து என்ன பண்ணப்போகிறேன். நான் தான் அவருக்கு குரு.

விஜய் சாருக்கு நான் கதை கூறியபோது ஒரு படம் பண்ணி விட்டு வாங்க என்று கூறியுள்ளாராம். வாய்ப்பு கிடைக்கும் வரை என் ஊருக்கு செல்லபோவதில்லை என்று தெரிவித்துள்ளார் செல்வேந்திரன்.