அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்? சங்கர் மகளுடன் ரொமான்ஸ்-ல் சிவகார்த்திகேயன்..

Sivakarthikeyan Aditi Shankar Maaveeran
By Edward Aug 03, 2022 10:12 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். தன் இரண்டாம் மகள் டாக்டர் படிப்பு படித்து மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். சினிமா மீது ஆசை வந்ததால் மகள் அதிதி சங்கரை பிரம்மாண்டமான முறையில் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

கார்த்தி நடிப்பில் அவருக்கு ஜோடியாக நடித்த அதிதி சங்கரின் விருமன் படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயம் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரானா குமாரு படத்தில் கமிட்டாகினார்.

பின் படம் சிம்புவால் டிராப்பானதால் அதிதி சங்கரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் அதிதி சங்கர் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருந்ததாகவும் அதன்பின் அதிதி சங்கரை கமிட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.