இயக்குநர் சங்கரின் மகள் திருமண புகைப்படம்! மாப்பிள்ளை இந்த கிரிக்கெட் வீரர்தான்?

marriage director shankar indian2
By Edward Jun 27, 2021 02:16 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். முன்னணி நடிகர்களை இயக்கிய சங்கர் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி, எந்திரன், 2.0 படத்தினை இயக்கி பிரம்மிக்க வைத்தார்.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் சில பிரச்சனைகளால் தடை ஏற்பட்ட நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண் படத்தினை இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தடை மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு என பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சங்கர் மகளுக்கு திருமணம் செய்யவுள்ளதாகவும் மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் ஓனர் மகன் ரோஹித் தாமோதரனை மாப்பிள்ளையாக தேர்வு செய்தார் என்ற தகவல் வெளியானது.

தற்போது சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கர் - ரோஹித் தாமோதரன் ஜோடிகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. திருமணம் நடைபெற்ற அதிகாரபூர்வமாக புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டது. 

அதில் தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களும் உடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின் பிரம்மாண்ட மணமக்கள் அழைப்பும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.