அந்த நடிகைதான் வேண்டும்! கமலுக்காக குழப்பத்தில் இயக்குநர் சங்கர்..

trisha shankar indian2 kamalhaasan kajalaggarwal tamanaah
By Edward Dec 07, 2021 02:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக இருப்பவர் சங்கர். பல வெற்றிப்படங்களை கொடுத்த பின் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண், கியாரா அத்வானியுடன் ஒரு படத்தினை எடுத்து வருகிறார். நடிகர்களை தேர்வு செய்வதில் சங்கர் கவனமாக இருப்பார் என்று தெரியும்.

அப்படியாக இந்தியன் 2 படத்திற்கு கமல்ஹாசனுக்கு ஜோடியாக முதலில் காஜல் அகர்வால் பேசியிருந்து படப்பிடிப்பும் சென்றது. சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட காஜல் அகர்வால் அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்த, கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் வந்தது.

கர்ப்பமானதால் பல படங்களில் இருந்து விலகி வந்த கஜால் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணி இருந்த சங்கர் நடிகை திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்த்தியுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தில் தமன்னா சம்பளம் காட்சிகளை கேட்டு கால்ஷீட்டிற்கு ஏற்ப ஒப்புக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.