கியாரா வேண்டாம்! எனக்கு அந்த ஒல்லி நடிகைதான் வேண்டும்? இயக்குநரிடம் அடம்பிடிக்கும் பிரபல நடிகர்..

shankar ram charan aliabhatt kiaraadvani
By Edward May 24, 2021 04:45 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ராம் சரண். சமீபத்தில் வெளியான படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்தும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றார். அந்தவகையில் தமிழில் பிரம்மாண்ட இயக்குநராக திகழும் இயக்குநர் ஷங்கரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்தியன் 2 படத்தில் தற்போது ஏற்பட்ட பிரச்சனையால் மற்ற படங்களில் வேலைகள் நின்று வருகிறதாம். ஆனால், சங்கர் தெலுங்கு படங்களில் கால்ஷீட் கொடுத்ததால் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகல் நடந்து வருகிறதாம். இந்நிலையில், ராம் சரண் மற்றும் சங்கர் இணைந்து நடிக்கும் படத்தில் கதாநாயகிகள் யார் என்ற கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகள் இருந்து வருகிறது.

அந்தவகையில், ராம் சரண் இந்த நடிகை தான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம். அது வேறு யாருமில்லை, பாலிவுட்டின் முன்னனி நடிகையாக இருக்கும் ஆலியா பட் தானாம். ராம் சரண், ஆலியா பட் நடிப்பில் இயக்குநர் ராஜ மெளலி படமான ராஜமவுலி இயக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) படத்தில் நடித்து வருவதால் இப்படத்திலும் ஆலியா பட் தான் என்று கூறியுள்ளாராம்.

அதற்கு காரணம், RRR படத்தின் ஜோடி வரவேற்பு பெற்றதால் அதே நம்பிக்கை இப்படத்திலும் கிடைக்கும் என்பதற்காக ராம் சரண் சங்கரிடம் கோரிக்கையை கூறியுள்ளாராம். ஆனால், ஷங்கர் மனதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.