ஷங்கர் மருமகன்னா சும்மாவா!! ஐஸ்வர்யாவின் கணவர் தருணின் மறுபக்கம் இதுதான்..

Shankar Shanmugam Aditi Shankar
By Edward Apr 17, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி ரிலீஸ் செய்யவிருக்கிறார். இதற்கிடையில் தன் இரு மகள்களின் வாழ்க்கையை பற்றிய யோசித்து சில விசயங்களை செய்து வருகிறார்.

ஷங்கர் மருமகன்னா சும்மாவா!! ஐஸ்வர்யாவின் கணவர் தருணின் மறுபக்கம் இதுதான்.. | Shankar Son In Laws Tarun Karthikeyan Work In Us

விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா, அப்பா வீட்டில் இருந்து வந்த நிலையில், இரு ஆண்டுகள் கழித்து தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தருண் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருப்பதாகவும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்னம் படத்திலும் அசிஸ்டண்ட்-ஆக பணியாற்றினார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஷங்கரின் மருமகன் தருண் என்ன செய்திருந்தார் என்று நேற்று நடந்த பிரஸ் மீட்டில் ஷங்கரின் சம்மந்தி தெரிவித்துள்ளார்.

ஷங்கர் மருமகன்னா சும்மாவா!! ஐஸ்வர்யாவின் கணவர் தருணின் மறுபக்கம் இதுதான்.. | Shankar Son In Laws Tarun Karthikeyan Work In Us

அப்போது ஐஸ்வர்யாவின் மாமனார் பேசுகையில், எல்லோரும் தருண் அசிஸ்டண்ட் டைரக்டர் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அவர் அமெரிக்காவில் பிறந்து சாஃப்ட்வேர் படித்திருக்கிறார்.

நான் ஐடி கம்பெனி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் என்றும் தருண் அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். சினிமா மீது இவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும் ஆகையால் இயக்குனர் ஆகவோ அல்லது நடிகராகவோ இவரை சினிமாவில் பார்க்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தருண் தந்தை தெரிவித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் மகள் திருமணத்திற்கு வந்ததற்கு நன்றி கூறி தெரிவித்திருந்தார் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் மருமகன் தருண் பேசுகையில், எல்லோருக்கும் நன்றி, நான், அங்கிளிடம் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்று கூறியிருக்கிறார்.

You May Like This Video