மாலத்தீவில் குடியும் குடித்தனமுமாக இருக்கும் சாந்தனு! வீடியோவை வெளியிட்ட மனைவி..
தமிழ் சினிமாவில் லிஜெண்டரி இயக்குனராக திகழ்ந்து தன் மகன் சாந்தனுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே பாக்யராஜ். 2007ல் சக்கரை கட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன்பின் சில படங்களில் நடித்டு நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். அதன்பின் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2015ல் தொகுப்பாளினி கீர்த்தி விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் கணவருடன் சேர்ந்து மாலத்தீவிற்கு சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
தற்போது நள்ளிரவில், மது அருந்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் குடியும் குடித்தனுமாக மாலத்தீவில் செட்டிலாகிவிட்டீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.