இதெல்லாம் நீ ஏன் செய்ற! சாந்தனு திருமணத்தில் விஜய் செய்தது! திட்டிய சங்கீதா.. REWIND
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் சாந்தனு பாக்யராஜ். தளபதி விஜய்யின் தீவிர தம்பதிகளாக இருந்து வருகிறார்கள் சாந்தனு மற்றும் கீர்த்தி.
சமீபத்தில் சாந்தனு அளித்த பேட்டியொன்றில் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை பற்றி பகிர்ந்துள்ளார். விஜய்யின் ரசிகன் என்பதால் தனது கல்யாணத்தில் தாலியை விஜய் தான் எடுத்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதனால் விஜய் தன் கைபட தாலியை எடுத்து சாந்தனுவுக்கு கொடுத்தார். அதன்பிறகுதான் சாந்தனு, கிகி திருமணம் செய்தார்.
ஆனால் விஜய் தன் மனைவியிடம் சாந்தனு தாலி எடுத்து கொடுக்க வேண்டுமென சொன்னான். அதனால் நான் தாலி எடுத்துக் கொடுத்தேன் என கூறியுள்ளார். அதற்கு விஜய்யின் மனைவி இதையெல்லாம் வயதில் மூத்த பெரியவர்கள் செய்ய வேண்டிய விஷயம். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்ய வேண்டிய விஷயம் என கூறியுள்ளார். ஆனால் சாந்தனு பரவாயில்லை என்று கூறியுள்ளாராம்.