நிஜமாகவே அடிச்சாங்க, கதறி அழுதுட்டேன்..ஜெயிலர் 2 பட நடிகை ஷீலா ஓபன்..

Rajinikanth Sheela Rajkumar Nelson Dilipkumar Jailer 2
By Jai Oct 21, 2026 07:30 AM GMT
Report

ஜெயிலர் 2 - ஷீலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல டாப் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்து அக்டோபர் 15 ஆம்தேதி ரிலீஸான படம் தான் ஜெயிலர் 2. நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் பிரமாண்டமான இசையில் ஜெயிலர் 2 படம் வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வருகிறது.

இப்படத்தின் ஒரு காட்சியில் சாதுவாக இருக்கும் ஜெயிலரை ரவுடிகள் சூழ்ந்து கொள்ளும்போது, கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமாரை கொடூரமாக தாக்குவார்கள். அப்போதுதான் ஜெயிலரின் உண்மையான முகத்தை காட்டுவார். அந்த காட்சியில் நடித்தது குறித்து ஷீலா ராஜ்குமார் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

நிஜமாகவே அடிச்சாங்க, கதறி அழுதுட்டேன்..ஜெயிலர் 2 பட நடிகை ஷீலா ஓபன்.. | Sheela Rajkumar Cried On Rajini Jailer 2 Sets

அதில், முதலில் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி சார் காலில் விழுவது தான் படமாக்கப்பட்டது. முதல் ஷாட்டிலேயே, சார் இது என் பொண்ணு சார் என்று தேனப்பன் சார் சொல்லும்போது நான் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் சீன் தான் எடுத்தார்கள். அக்காட்சியில் நடிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

ரஜினி சார் ஷூட்டிங்கிற்கு வந்ததும் அனைவரிடமும் இயல்பாக பழகி செட்டிலிருந்த அனைவருக்கும் ஹாய் சொன்னார். ஒரு நடிகையாக அந்த காட்சியில் நடிக்கும் அந்த சீன் முடிந்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான் மனதில் இருந்தது. அக்காட்சியில் ரவுடிகள் என் கால் பாதத்தில் அடிக்கும் சீனில் ஃபைட் மாஸ்டர் ஆறுமுறை அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

நிஜமாகவே அடிச்சாங்க, கதறி அழுதுட்டேன்..ஜெயிலர் 2 பட நடிகை ஷீலா ஓபன்.. | Sheela Rajkumar Cried On Rajini Jailer 2 Sets

முதல், இரண்டு அடி அடித்தபோது பெரிதாக வலிக்கவில்லை, ஆனால் அடுத்தடுத்து அடித்த அடிகள் நிஜமாகவே அடித்துவிட்டார். பாதத்தில் அடித்ததால் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ஷாட் முடிந்தப்பின் நான் அழுதுகொண்டு தான் இருந்தேன் என்று ஷீலா தெரிவித்துள்ளார்.