திருமணமாகி 6 வருடம் கழித்து கர்ப்பம்! 36 வயதில் பிரபல பாடகி நெகிழ்ச்சி..
பிரபலங்கள் பலர் திருமணமாகி குழ்ந்தை பெற்றுக்கொள்ளாமல் தங்களின் மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வருகிறார்கள். அதேபோல் சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் தவித்தும் வருவார்கள். அந்தவகையில் இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாகவும், தமிழ் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் பேவரைட் பெண் பாடகர் என்றால் அது ஸ்ரேயா கோஷல் தான்.
டி இமான் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்றோர் தாங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு பாடலாவது பாட வைத்து விடுவார்கள். ஸ்ரேயா கோஷல் நடிகைகளைப் போலவே மாடலிங் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். அவ்வப்போது மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவார்.
வயது 36 ஆனாலும் இன்னும் பார்ப்பதற்கு இளம் பெண் போல் தோற்றமளிக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு திருமணமானதே நிறைய பேருக்கு தெரியாது. ஸ்ரேயா கோஷல் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையில் இருந்த ஷ்ரேயா கோஷால் தற்போது முதல் முறையாக கருவுற்றிருக்கும் புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கேள்விபட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.