பர்ஸ்ட் டைம் இங்க நடிச்சபோது...அதனால் தான் வாய்ப்பு கொடுக்குறாங்க!! நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
ஷில்பா மஞ்சுநாத்
கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, வெப், சிங்கப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
பல மொழிகளில் நடித்துள்ள ஷில்பா, முதல் பக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில எமோஷ்னலான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பர்ஸ்ட் டைம் இங்க நடிச்சபோது
அதில், ஒவ்வொரு முறையும் இங்கு நான் வந்து மேடை ஏறி நிற்கும் போது எனக்கு பயமாக இருக்கும். எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமாவுக்கும் இந்த மண்ணிற்கும் நன்றி. முதன்முதலில் நான் இங்கு நடிக்க வரும்போது தமிழ் தெரியாது, சரியாக நடிக்கவும் வராது.
ஆனால் அதை எதுவும் பெரிதுப்படுத்தாமல் இங்கு மட்டும் தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கிறது. தமிழ் இண்டஸ்ட்ரியில் திறமையை மதிக்கிறார்கள், வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று ஷில்பா மஞ்சுநாத் பேசியுள்ளார்.