50 வயது, ஆண்களிடம் நேரடியாக அதை கேட்பேன்.. நடிகை ஷில்பா ஷெட்டி பரபரப்பு பேச்சு
Bollywood
Actress
Shilpa Shetty
By Bhavya
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தமிழில் இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
ஷில்பா தொழிலதிபர் ராஜ் குன்ரா என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். 46 வயதாகும் ஷமிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
பரபரப்பு பேச்சு
இந்நிலையில் சமீபத்தில் கபில் ஷர்மா ஷோவில் பங்கேற்ற ஷில்பா ஷெட்டி தனது தங்கை ஷமிதாவுக்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதாக கூறி உள்ளார்.
அதில்," நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்பேன். நான் ஏன் அதை கேட்கிறேன் என பலரும் யோசிப்பார்கள். அப்போது எனது தங்கைக்காக என கூறுவேன். இதில், என்ன வெட்கம்" என ஷில்பா கூறி உள்ளார்.