90ஸ் கிட்ஸின் கிளாமர் ஐகான்!! பிக்பாஸ் 18ல் ரீஎண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை யார் தெரியுமா..
ஷில்பா ஷிரோத்கர்
90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷில்பா ஷிரோத்கர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 18ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷில்பா.
கிஷன் கன்ஹையா, திரிநேத்ரா, ஹம், குதா கவா, ஆங்கேன், பெஹ்சான், கோபி கிஷன், பேவஃபா சனம் மற்றும் மிருத்யுதண்ட் போன்ற படங்களில் நடித்த ஷில்பா, 90ஸ் காலத்தில் கவர்ச்சி ஐகான் நடிகையாக திகழ்ந்தார்.
அப்படி அவரை அழைப்பது குறித்து, நான் எனக்குப் பிடித்ததைச் செய்தேன், சிறந்தவர்களுடன் பணியாற்றினேன், அங்கீகாரம் கிடைத்தது.
அந்த அடையாளத்தைப் பற்றி எனக்கு எந்த கவகையும் இல்லை, அது எனக்கு பெருமையான விஷயம். என் வாழ்க்கையின் சிறந்த ஆண்டுகளை அப்போதுதான் கண்டேன் என்று ஷில்பா ஷிரோத்கர் தெரிவித்தார்.
இதனையடுத்து 2000 ஆம் ஆண்டு அபரேஷ் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிய ஷில்பா, 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.