கல்யாணமாகி மூணு மாசம் ஆகியும் வெளிநாட்டில் குடும்பம் நடத்தும் நயன்தாரா.. குஷியில் கணவர்..

Nayanthara Vignesh Shivan
By Edward Sep 10, 2022 12:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன் தாரா. தான் 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஹனிமூன் சென்றனர். ஒரு வாரத்திற்கு பின் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வந்த நயன் - விக்கி மீண்டும் ஸ்பெயின் நாட்டுக்கு விமானத்தில் இரண்டாம் முறை ஹனிமூன் சென்றிருந்தனர்.

கல்யாணமாகி மூணு மாசம் ஆகியும் வெளிநாட்டில் குடும்பம் நடத்தும் நயன்தாரா.. குஷியில் கணவர்.. | Shivan Shares Photo With Nayanthara Honeymoon

அங்கு நயன் தாராவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நேற்றோடு திருமணமாகி 3 மாதங்களாகிய நிலையில் நயன் தாராவுடன் கைக்கோர்த்தபடி சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் ஹ்னிமூன் முடியலையா உங்களுக்கு என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.