அப்படி பண்ணா என் மேல் தான் பழி விழும்.. இப்படிதான் கெட்டபேர் வருது!! வடிவேலு ஒபன் டாக்..

Sundar C Vadivelu Gossip Today Gangers
By Edward Apr 25, 2025 02:30 AM GMT
Report

கேங்கர்ஸ்

தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ளார். இப்படம் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இப்படம் ரிலீஸாகிவுள்ள நிலையில் முதல் காட்சியை பார்த்த சிலர் டிவிட்டர் பக்கத்தில் தங்களின் விமர்சனத்தை பகிர்ந்துள்ளனர்.

அப்படி பண்ணா என் மேல் தான் பழி விழும்.. இப்படிதான் கெட்டபேர் வருது!! வடிவேலு ஒபன் டாக்.. | Vadivelu Talk About False News Spread Shocked

வடிவேலு ஒபன் டாக்

அதில் படத்தின் முதல் பாதி பக்கா சுந்தர் சி டெம்பிளேட் என்றும் இரண்டாம் பாதி பக்கா காமெடி என்றும் கூறியுள்ளனர். படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார் வடிவேலு.

அதில், ஒருசில படங்களில் இயக்குநர்கள் சொல்லும் காட்சிகளுக்கு நாம் சில இன்புட்ஸ் கொடுத்தால் சிலர் ஏற்றுக்கொள்வார்கள், சிலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களிடம் நான் சொல்லிப்பார்ப்பேன், ஆனால் அந்த இயக்குநர்கள் கடைசிவரை அவர்கள் சொன்ன காட்சியை தான் படமாக எடுப்பார்கள்.

அப்படி பண்ணா என் மேல் தான் பழி விழும்.. இப்படிதான் கெட்டபேர் வருது!! வடிவேலு ஒபன் டாக்.. | Vadivelu Talk About False News Spread Shocked

அதை ஒருசிலர் கேள்விப்பட்டு இயக்குநருடன் நான் வாக்குவாதம் செய்ததாக கிளப்பி விடுகிறார்கள். வடிவேலு திமிர் பேச்சு என்றெல்லாம் ஹெட் லைன்ஸாக போடுகின்றனர். இப்படித்தான் எனக்கு கெட்ட பெயர் வருது, கடைசில மொத்தப்பழியும் என் மேல் தான் விழும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.