வாய்ப்புக்காக மடியில் உட்கார வைத்து அத்துமீறிய உறவினர்...நடிகை ஷிவாங்கி ஓபன் டாக்..
ஷிவாங்கி ஜோஷி
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ஷிவாங்கி ஜோஷி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான லாக் அப் 2(Lock Upp: Sach Ya Sazaa) ரியாலிட்டி ஷோவில் பேசிய ஒரு விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நிகழ்ச்சியில் முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்த ஷிவாங்கி, Yeh Rishta Kya Kehlata Hai தொடரில் நைரா ரோலில் நடித்து பிரபலமானவர், Balika Vadhu 2, Barsatein போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

அவர் பேசுகையில், என் அம்மாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் நீ நடிகையாக வேண்டுமென்றால் கார் ஓட்டக் கத்துக்கணும் என்று சொல்லி எனக்கு கார் ஓட்ட கத்து தரேன் எனூர் காரில் தன்னுடைய மடியில் என்னை உட்கார வைத்தார். அப்போது எல்லைமிஈறி என் அந்தரங்க உறுப்புகளை அவர் தொட முயன்றார்.
அதோடு மட்டுமில்லாமல் என் அப்பா, அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து சினிமாவில் நெருக்கமான பல காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என கூறி, அதை சொல்லி தருவதாக மீண்டும் தவறாக நடக்க முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் என்னை கீழே தள்ளிவிட்டார்.
சரியாக அப்போது வெளியே போயிருந்த என் அப்பா, அம்மா வீட்டிற்குள் வந்துவிட்டதால்தான் தப்பித்தேன். அவர் என்னுடன் நெருக்கமாக இருக்க முயன்றதை பார்த்த என் பெற்றோர் அடித்து வெளியே துரத்தினார்கள். அந்த சம்பவத்திற்குப்பின் நான் பல மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகவே பயந்தேன்.
ஸ்கூலுக்கு கூட போவதற்கு ரொம்ப பயப்பட்டேன். நான் இப்போது வேண்டுமென்றால் சீரியல்களில் நடித்து எல்லோருக்கும் பிரபலமாக இருக்கிறேன், நல்ல வசதியாக இருக்கிறேன், ஆனால் என் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். அப்பா பிசினஸ் பண்ணிட்டு இருந்தாங்க, அது பெரிய நஷ்டமாகிவிட்டது. சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம்.
அந்த சமயத்தில் உறவினர்கள் வாங்கி கொடுத்த ரொட்டி, வெண்ணையை சாப்பிட்டு பல நாட்கள் வாழ்ந்தோம். பின் என் பெற்றோர் கேண்டினில் வேலை பார்த்தும், மற்றவர்கள் துணியை தைத்து தான் எங்களுடைய குடும்பமே நடத்தினாங்க என்று அவர் பேசியுள்ளார்.