ஹீரோயினா நடிப்பீங்கன்னு பாத்த இப்படியா? கலாய்த்தவருக்கு இப்படியொரு பதில் கொடுத்த ஷிவானி..

Shivani Narayanan Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 13, 2022 06:11 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து பலர் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்கள். அதில் விஜேவாகவும், சீரியல் நடிகையாகவும் இருந்தும் கூட பல தங்களின் உழைப்பால் முன்னேறி இருக்கிறார்கள். அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

சின்னத்திரை அறிமுகமும் பிக்பாஸும்:-

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகி தன்னுடைய 15 வயதில் பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். சீரியலுக்கு பின் இன்ஸ்டாகிராம் அவர் பதிவிடும் புகைப்படங்கள், நடன வீடியோக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தில் வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானி மக்கள் மத்தியில நல்ல இடத்தினை பிடித்தால் படங்களில் அடுக்கடுக்காய் வைத்து நடிப்பார் என்று நினைத்திருந்தார்.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் கமிட்டாகினார். அனைவரும் ஷிவானி ஹீரோயினாகவுள்ளார் என்று பலர் அவருக்கு எப்படியான ரோல் இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தனர்.

விக்ரம் கால்ஷீட் :-

விக்ரம் படம் வெளியாகி அந்த எதிர்ப்பார்ப்பை எல்லாம் சுக்குனூராக்கிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஷிவானி 10 நிமிடம் கூட நடிக்கவில்லை. படம் வெளியாக பெருமையுடன் ஷிவானி இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்தும் வருகிறார்.

கலாய்த்த ரசிகர்கள்:-

சினிமாவில் முதல்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் பெரிய ஸ்கோப் இருக்கும் என்று எதிர்ப்பார்த்த ஒரு ரசிகர், பிக்பாஸுக்கு பின் நீங்கள் ஹீரோயினாக நடிக்கதான் ஆசைப்பட்டோம். ஆனால் சின்ன ரோலில் கிடையாது. இனியாவது புத்திச்சாலித்தனமாக செயல்படுங்கள் என்று அட்வைச் செய்துள்ளார்.

பதிலடி கொடுத்த சம்பவம்:-

இதற்கு ஷிவானி, உங்களின் அட்வைஸுக்கு நன்றி. சின்னித்திரையில் இருந்து படங்கள் வரை மிகவும் கடினமாக முயற்சி செய்யும் சாதாரண பெண் தான் நான். முயற்சிக்கு அதிக பெருமை, உழைப்பு முக்கியம்.

நான் இதன்மூலம் பயிற்சியை தான் எடுத்துக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்யதான் பார்ப்பேன். இன்னும் பல தூரம் இருக்கிறது. இதுதான் ஆரம்பம் என்று கூறியுள்ளார். இதற்கு பலர் பாராட்டினையும் கூறி வருகிறார்கள்.

GalleryGallery