இந்த நடிகருக்கு ரஜினிகாந்த் சித்தப்பாவா!! மேடையில் ஷாக் கொடுத்த பிரபல கன்னட நடிகர்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயத்தில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார், ரஜினிகாந்த் என் குடும்ப உறுப்பினர் இல்லை என்றாலும் தன்னுடைய சித்தப்பா போன்றவர் என்று கூறியிருக்கிறார்.
தன் தந்தை சபரிமலைக்கு நான் சின்னவயதில் இருக்கும் போது சென்றிருந்தேன். அப்போது ரஜினியின் கைகளை பிடித்துக்கொண்டு தான் பயணம் மேற்கொண்டதாகவும் அந்த நாள் மிகவும் சிறப்பானது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் சிவராஜ் குமாருக்கு ரஜினியை விட 10 வயது தான் வித்தியாசம் என்பதால் அவர் கூறியதை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.
