முகேஷ் அம்பானி குடும்பத்தின் Lucky Charm மூத்த மருமகள் தானாம்!! அது எப்படி தெரியுமா?
முகேஷ் அம்பானி
உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை பற்றி பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 9.10 லட்சம் கோடி நிகர மதிப்பினை பெற்றுள்ள முகேஷ் அம்பானி தன்னுடைய மகன் அனந்த் - ராதிகா திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் நடைத்தி முடித்தார். அதையும் தாண்டி அம்பானி குடும்பத்திற்கு லக்கி சார்மாக இருப்பது அவருடைய மூத்த மருமகள் தானாம்.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா ஆளுமைக்கு பெயர் போனவராம். ஒரு குடும்பத்தின் மூத்த மருமகள் என்பது அக்குடும்பத்தின் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். அந்தவகையில் மூத்த மருமகள் ஸ்லோகாவின் நேர்மை, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், இரக்கத்தை குறிக்கும் நம்பர் ஒன் பெண்மணியாக கருதப்படுகிறாராம்.
மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா
எண் கணிதத்தில் மாஸ்டர் நம்பர் என்பது மற்ற இலக்கங்களைவிட அதிக பவர். அப்படி எண் கணிதத்தில் இருக்கக்கூடிய மாஸ்டர் எண்கள் என்பது 11, 12, 33 இருக்கும். இதன்மூலம் அம்பானி குடும்பத்திற்கு ஸ்லோகா மேத்தா ஒரு அதிர்ஷ்டம் நிறைந்தவராக பார்க்கப்பட முக்கிய காரணமாக இது இருக்கிறது. ஸ்லோகா மேத்தா 1990 ஜூலை 11ல் பிறந்ததால் 11 என்பது மாஸ்டர் நம்பர்.
11 எண் என்பது ஆன்மீகத்தின் மகத்துவம், ஒருவரின் தனிப்பட்ட குண நலன்கள், மறைக்கப்பட்ட ரகசியங்கள் ஆகியவற்ரை வெளிக்காட்டும். எண் கணிதத்தை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் உங்களுக்கு மாஸ்டர் நம்பர் என்று சொல்லப்படும் 11ன் மகத்துவம் பற்றி தெரிந்திருக்கும்.
முகேஷ் அம்பானியின் இளைய மருமகளான ராதிகா மெர்ச்சண்ட் தன்னுடைய திருமணத்தின் போது ஸ்லோகா மேத்தா மிகவும் அன்பானவர், அற்புதமானவர் என்றும் அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
ஜோதிடத்தில் 1 என்பது சூரியனை குறிக்கும் என்பதால் 11ல் பிறந்த தேதியை கொண்டவர்கல் சூரியனை இணையான பண்புகளை பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு நேர்மை, பொறுமை, உழைப்பு, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் போன்றவைகள் எல்லாம் நிறைந்திருப்பதால் அம்பானி குடும்பத்தின் லக்கி சார்ம் மூத்த மகள் ஸ்லோகா மேத்தா தான் என்று கூறி வருகிறார்கள்.