வடிவேலுவுடன் தப்பா பேசுனாங்க!! மறைந்த நடிகை ஷோபனாவின் அக்கா வேதனை..

Vadivelu Gossip Today Tamil Actress Actress
By Edward Jan 30, 2025 02:30 AM GMT
Report

சின்னத்திரை வெள்ளித்திர என்று அனைத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா, கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

வடிவேலுவுடன் தப்பா பேசுனாங்க!! மறைந்த நடிகை ஷோபனாவின் அக்கா வேதனை.. | Shobana Died After Fasting But People Says Sister

ஷோபனாவின் அக்கா

முக்கியமாக வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கும் ஷோபனாவின் அக்கா, ஒரு பேட்டியொன்றில் தங்கை பற்றி பகிர்ந்துள்ளார். ஷோபனா முருக பக்தை என்பதால் எப்போதும் விரதம் விரதம் என்று இருப்பாங்க.

அதனால் வயிற்றில் பிரச்சனை ஏற்பட்ட, சாப்பிடாமல் டீ மட்டும் குடித்து குடித்து பித்தமும் அதிகமாகி ரொம்பவே உடம்பு முடியாமல் போய்விட்டது. ஷோபா, வடிவேலு சாருடன் படம் பண்ணும் போதே விவேக் சாரோடவும் நடித்தாள். அதன்பின் என்ன ஆச்சின்னா, இவங்க வடிவேலுவோட நடிக்குறாங்க, அதனால் இவங்க வடிவேலுவோட ஆளுன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

வடிவேலுவுடன் தப்பா பேசுனாங்க!! மறைந்த நடிகை ஷோபனாவின் அக்கா வேதனை.. | Shobana Died After Fasting But People Says Sister

வடிவேலு சாரோட ஒன்னா வெச்சு பேசுனாங்க

விவேக் சார், என் கூட நடிக்குறதுக்கு முன்னாடி வடிவேலு சார்கிட்ட ஒருமுறை கேட்டுக்கோன்னு எல்லாம் அவளிடம் சொன்னாங்க. அதன்பின் பெருசா அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. ஷோபா உடம்பு முடியாம் இருந்தபோது அவளை பற்றி என்னனென்னவோ எழுதுனாங்க. வடிவேலு சாரோட ஒன்னா வெச்சு பேசுனாங்க.

ஒரு ஆர்ட்டிஸ்ட்னா அப்படித்தான் பண்ணுவாங்களா? இதெல்லாம் பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. என் தங்கை இறந்ததுக்கு பின் எங்கப்போனாலும் எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க, இது என் அம்மாவுக்கு கஷ்டமா இருந்துச்சு.

ஷோபா இறந்தப்பின் அவள பத்தி புரளி எல்லாம் கிளம்பிச்சு, ஷோபா பேயா அங்க நிக்குது இங்க நிக்குதுன்னு சொன்னதால அம்மாவால் அதையும் தாங்கிக்கொள்ள முடியாம ஒரே ஆளாய் தனியா இருந்தாங்க என்று ஷோபனாவின் அக்கா பேட்டியில் தெரிவித்துள்ளார்.