அப்படி வாழ்வதுதான் எனக்கு நிம்மதி!! 54 வயதான நடிகை சோபனா கொடுத்த விளக்கம்...
Shobana
Indian Actress
Marriage
Tamil Actress
Kalki 2898 AD
By Jai
சோபனா
80, 90களில் கொடிக்கட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சோபனா. முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் கல்கி 2898ஏடி படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது 54 வயதாகும் நடிகை சோபனா இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். திருமணம் செய்யாததற்கு என்ன காரணம் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
திருமணம்
அவர் அளித்த பேட்டியில், தனக்கு தனிமையாக வாழவே பிடித்திருக்கிறது என்றும் திருமணத்தின் மீது ஈர்ப்பு இல்லை, தனிமையாக வாழ்வதுதான் நிம்மதியாக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை சோபனா.
ஆனால் அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.