75 வயது நடிகருக்கு மனைவியாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்.. மனம் திருந்து பேசிய நடிகை ஷோபனா
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷோபனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானார். தற்போது பிஸியான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
கலைஞர் டிவியில் விரைவில் மீனாட்சி சுந்தரம் என்கிற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதில் நடிகர் எஸ்.வி. சேகர் தன்னை விட 30 வயது குறைவான இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வது போல் promo வீடியோ வெளிவந்தது.
இந்த promo-வை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி, இப்படியொரு கதையா என கூறி வந்தனர். அதிலும் குறிப்பாக எஸ்.வி. சேகரை திருமணம் செய்துகொள்ளும் பெண் ரோலில் நடித்திருக்கும் நடிகை ஷோபனா எப்படி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஷோபனா விளக்கம் கொடுத்துள்ளார்.
இதில் , "இது சர்ச்சையான கதை தான். ஆனால், நடிப்பில் explore செய்யலாம் என இதற்கு ஒப்புக்கொண்டேன். ஒரே விதமான ரோலில் நடிக்க வேண்டும் என்று இல்லை. பல விதமான ரோல்களில் நடிக்க வேண்டும். எப்படி நடித்தாலும் கொஞ்சம் பேர் நெகடிவ் ஆக தான் பேச போகிறார்கள். அப்படி நெகடிவ் வந்தாலும் வாங்கிக்கொள்ளலாம், தப்பு இல்லை. அந்த promo-வை பார்த்துவிட்டு என் நண்பர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். முன்பு நடி என சொன்னவர்கள் கூட இதை பார்த்து ஷாக் ஆனதாக கூறினார்கள்" என நடிகை ஷோபனா பேசியுள்ளார்.