நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய ஷ்ரத்தா கபூர்!! காதலன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..
பிரபல நடிகர் சக்தி கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான ஆஷிகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார்.
இப்படத்தை தொடர்ந்து ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் து ஜூதி மைன் மக்கார் உட்பட பல வெற்றிகரமான படங்களில் நடித்தார்.
இவர் தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்த சாஹோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து படு தோல்வியை சந்தித்து.
நடிகை ஷ்ரத்தா கபூர் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் இருந்து தற்போது வரை பல நடிகர்களுடன் கிசுகிசுப்பில் சிக்கி இருக்கிறார்.
இந்நிலையில் இவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது உண்மையான காதலனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஷ்ரத்தா கபூரின் காதலன் பெயர் Rahul Mody, இவர் ஒரு கதை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
