ரசிகர்களின் கனவு கன்னி நடிகை ஷ்ரத்தா கபூருக்கு இன்று பிறந்தநாள்.. அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஸ்ட்ரி 2 திரைப்படம் உலகளவில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஷ்ரத்தா கபூருக்கு இன்று 38வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை ஷ்ரத்தா கபூரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறாராம்.
மேலும் விளம்பரங்களில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. நடிகை ஷ்ரத்தா கபூரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.