இனி இப்படி மட்டும்தான் நடிக்கப்போவதாக கூறிய நடிகை ஸ்ரேயா.. காரணம் என்ன

Shriya Saran Indian Actress Actress
By Kathick Sep 20, 2025 03:30 AM GMT
Report

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஸ்ரேயா சரண். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், மற்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இனி இப்படி மட்டும்தான் நடிக்கப்போவதாக கூறிய நடிகை ஸ்ரேயா.. காரணம் என்ன | Shreya Saran Talk About How She Going To Act

இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்ரேயா சரண் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில், "ரசிகர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால் அவர்கள் நம்மை விரும்புவதை விட மாட்டார்கள். அடுத்தடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வகையில் நடிக்க போகிறேன்" என ஸ்ரேயா கூறியுள்ளார்.