நடிகை ஸ்ரேயா சரணின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்திய நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் தெலுங்கில் தனது திரைப்பயணத்தை தொடங்கி பின் ஹிந்தி, தமிழ், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிக்க துவங்கினார்.
தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், மழை, திருவிளையாடல் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஸ்ரேயா இணைந்து படங்கள் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு டென்னிஸ் வீரரான Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும், Audi A6, Mercedes benz, BMW 7 சீரிஸ் என பல கோடி மதிப்புள்ள பல சொகுசு கார்களை நடிகை ஸ்ரேயா சொந்தமாக வைத்துள்ளார். இதுவே ஸ்ரேயா சரணின் சொத்து மதிப்பு. ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.