நடிகை ஸ்ருதி காதலனுடன் தீபாவளி கொண்டாட்டம்:இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Shruthi Hassan
By Jeeva
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தற்போது தமிழில் எந்த படமும் கைவசம் இல்லாத நிலையில் மும்பையில் தனது சொந்த வீட்டில் வசித்துவருகிறார்.
social media-வில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது தனது காதலனுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் ஸ்ருதி தனது காதலன் சாந்தனுவுடன் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

