46 வயதில் நடிகை ஸ்ருதி ராஜுக்கு காலில் ஏற்பட்ட அக்கிலிஸ் தசைநார் கிழிவு!! தற்போதைய நிலை..
ஸ்ருதி ராஜ்
மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் 1996ல் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். இதனையடுத்து, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.

2008ல் இருந்து சினிமா வாய்ப்பில்லாமல் இருந்த ஸ்ருதி, தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். கிட்டத்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தென்றல் சீரியல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பின் ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த ஸ்ருதி தற்போது லட்சுமி என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு மாதமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த ஸ்ருதி ராஜ், தனக்கு ஏற்பட்ட பிரச்சனை, அறுவை சிகிச்சை பற்றிய விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு என்ன ஆனது என்று பலரும் கேட்டு வந்தீர்கள்.
எனக்கு 'அக்கிலிஸ் தசைநார் கிழிவு (Achilles Tendon Rupture)' ஏற்பட்டதால் அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தது. சிகிச்சை மேற்கொண்டு தற்போது குணமடைந்து வருகிறேன். அதில் இருந்து மீண்டு வர முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.
சிறிது காலம் அதற்கான ஓய்வு தேவை என்பதால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கவுள்ளேன். நான் நிச்சயம் விரைவில் குணமடைந்துவிடுவேன். என் நலனை விசாரித்த அனைவருக்கும் நன்றி, உங்கள் அன்பும் அக்கறையும் எனக்கு உண்மையிலேயே மிகவும் அர்த்தமுள்ளவையாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.