பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி.. சாட்சியை அழைத்து வந்த முத்துவேல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Oct 02, 2026 07:15 AM GMT
Report

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்ட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி.. சாட்சியை அழைத்து வந்த முத்துவேல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zeetamil Karthigai Deepam Serial Oct 2Nd Episode

அதாவது சந்திரகலா சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு போன் செய்து சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டும் விஷயத்தை சொல்கிறார். இன்னொரு பக்கம் கார்த்திக் பரமேஸ்வரி அழைத்துச் சென்று பாட்டியிடம் அறிமுகப்படுத்த பரமேஸ்வரி நடந்த விஷயத்தை சொல்கிறார்.

பல நாளாக மறைக்கப்பட்ட உண்மை வெளியே வரப் போகும் சந்தோஷத்தில் பரமேஸ்வரி பாட்டி இருக்க பஞ்சாயத்து கூடுகிறது. பரமேஸ்வரி தன்னைப் பற்றிய அறிமுகம் செய்து கொண்டு ஒரு உண்மையை சொல்வதற்காக தான் இந்த பஞ்சாயத்துக்கு வந்திருப்பதாக சொல்கிறார். சாமுண்டீஸ்வரி அவங்க சொல்றத கேட்டு அது உண்மையா இல்லையா என்று தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறாள்.

பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி.. சாட்சியை அழைத்து வந்த முத்துவேல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zeetamil Karthigai Deepam Serial Oct 2Nd Episode

பிறகு பஞ்சாயத்து கூட பரமேஸ்வரி பாட்டி சொன்ன சேர்த்து கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்துவேல் முதலில் இல்லை என மறுக்க ஒரு கட்டத்தில் ஆமா சாமுண்டீஸ்வரி அம்மாவை கொண்டது நான் தான் ஆனா அதில் விஷம் இருந்தது எனக்கு தெரியாது என்று சொல்கிறான்.

அதற்கு ஆதாரம் இருக்கா என்று கேட்க முத்துவேல் ஆதாரம் இருக்கிறது என்று கற்பகம் என்ற பெண்ணை அழைக்கிறான்.

பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி.. சாட்சியை அழைத்து வந்த முத்துவேல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zeetamil Karthigai Deepam Serial Oct 2Nd Episode

ராஜா சேதுபதி வீட்டில் 25 வருடத்திற்கு முன்பாக வேலை செய்த கற்பகம் இந்த வழக்கில் என்ன சாட்சி சொல்ல போகிறார்? இதனால் நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.