வியாபாரத்திற்காக பயன்படுத்தபடும் நடிகைகள்.. கமல் மகளின் ஷாக்கிங் தகவல்

Kamal Haasan Shruti Haasan
By Kathick Aug 16, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் என்பதை நாம் அறிவோம். நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள பேட்டி திரையுலகின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ' இந்திய சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்களை மையப்படுத்தியே கதைகள் உருவாகிறது. அப்படிப்பட்ட படங்களில் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே கதாநாயகிகளை பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தற்போது தான் இந்த நிலை மாறி, கதாநாயகர்களுக்கு நிகரான படங்கள் கதாநாயகிகளுக்கும் வருகிறது ' என்று கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன்..