தமிழ் சினிமா பிடிக்கவில்லை!! ஸ்ருதிஹாசன் ஷாக்கிங் பதில்.. அப்போ இதுதான் காரணமா?
ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாகவே தமிழில் படங்கள் நடிக்கவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி உடன் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதி ஹாசனிடம் தமிழை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு சென்றது ஏன் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதுதான் காரணமா
அதற்கு ஸ்ருதி, "நான் எங்கு போனாலும் தமிழ் பொண்ணு தான். சென்னை தான் என் வீடு, தமிழ் சினிமாவில் எனக்கு வரும் கதைகள் பிடிக்கவில்லை.
படம் பண்ணனுமே என என்னால் அதில் நடிக்க முடியாது. பண்ணா சூப்பரா பண்ணனும். பார்ப்பவர்களுக்கு அந்த படம் பிடிக்க வேண்டும். அப்படி கதை இருந்தால் நான் நடிக்க ரெடி.
நான் தமிழில் மீண்டும் நடிக்க தான் ரொம்ப நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு தகுந்த வாய்ப்பு தான் வரவில்லை" என ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார்.