தாய் கிழவி 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Box office
Thaai Kizhavi
By Kathick
ஒவ்வொரு புதிய திரைப்படம் ரிலீஸ் ஆகும்போதும் அப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளிவரும். அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த தாய் கிழவி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். இதனால், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் தாய் கிழவி படம் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில், 7 நாட்களில் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ. 40+ கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ. 50கோடியை ஈசியாக இப்படம் கடந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.