நடிகை ஸ்ருதி ஹாசனை சீண்டிய நடிகர்!! அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன இயக்குநர்...
ஸ்ருதி ஹாசன்
சினிமாவில் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர்களில் ஒருவர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் அவரின் வீடியோ ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து ஒரு தகவலை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ஸ்ருதி ஹாசன் கமிட்டாகி நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் திடீரென விலகியுள்ளதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார். அதில், டெகாய்ட் என்ற படத்தில் புதுமுக கதாநாயகனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார்.
சீண்டிய நடிகர்
அந்த படத்தின் ஹீரோ, ஸ்ருதி ஹாசன் கமலின் மகள் என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் தொடர்ந்து அவரை சீண்டியுள்ளார். இதைத்தாங்க முடியாத ஸ்ருதி, முதலில் பொறுத்துக்கொண்டு போனாலும் பின் அவரின் நடவடிக்கை குறித்து இயக்குநரிடம் கூறி இருக்கிறார்.
இயக்குநரிடம் கூறியதற்கு புதுப் பையன், ஆர்வக்கோளாரில் ஏதாவது செய்திருப்பார், கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்யுமாறும் கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான ஸ்ருதி ஹாசன் அப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.
தற்போது தெலுங்கு வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டு ஸ்ருதி ஹாசனுக்கு பதில் மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.