அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ்! கோடியில் புரள கமல் மகள் ஸ்ருதி எடுத்த பிளான்..

chiranjeevi shrutihaasan megasuperstar chiranjeevi154
By Edward Mar 09, 2022 07:10 PM GMT
Report

7ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல்ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வெப் சீரிஸ் படங்களில் கவனம் செலுத்தியும் வருகிறார். மேலும் வாய்ப்பிற்காக வயது மூத்த நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்ய கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் கிராக் படத்தில் 54 வயதான ரவி தேஜாவுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

இதையடுத்து தன் தந்தை கமல்ஹாசன் வயதுடைய நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணனின் 107 வது படத்தில் கமிட்டாகினார். இது பெரியளவில் பேசப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசன் தெலுங்கு சினிமாவின் மெகா சூப்பர் ஸ்டார் 66 வயதான சிரஞ்சீவியின் 154வது படத்தில் ஜோடி போடவுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்கள் இத்தனை வயது மூத்த நடிகருடன் நடிக்க எப்படி நடிக்க ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்.