ரஜினியுடன் கூலி படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம்.. விவரம் இதோ
Rajinikanth
Shruti Haasan
Coolie
By Kathick
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்தில் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 4 கோடி சம்பளமாக ஸ்ருதி வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.