CSK படுதோல்வி!! உடைந்துப்போய் கண்ணீர் விட்டு அழுத நடிகை ஸ்ருதி ஹாசன்..

Shruti Haasan Chennai Super Kings Sunrisers Hyderabad IPL 2025
By Edward Apr 26, 2025 09:30 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிப்பை தாண்டி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். Train, ஜனநாயகன், சலார் 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

CSK படுதோல்வி!! உடைந்துப்போய் கண்ணீர் விட்டு அழுத நடிகை ஸ்ருதி ஹாசன்.. | Shruti Haasan Cries After Csk Lost Against Srh Ipl

CSK படுதோல்வி

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் நேற்றைய CSK - SRH போட்டியை ஸ்ருதி ஹாசன் காண சென்னை சேப்பாக் மைதானத்திற்கு வந்துள்ளார்.

சென்னை அணி தோல்வியை அடைந்ததால் பல்ரும் வருத்தப்பட்ட நிலையில், ஸ்ருதி ஹாசன் கண்கலங்கி அழுதுள்ளார். ஸ்ருதி ஹாசன் உடைந்து போய் அழும் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.