அப்பாவை விட காதலர் தான் முக்கியம்! கமல்ஹாசனை ஒதுக்கும் மகள் ஸ்ருதிஹாசன்..

Kamal Haasan Shruti Haasan Vikram Movie
1 மாதம் முன்
Edward

Edward

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் வெளியாகவுள்ள படம் விக்ரம். நேற்று இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர் உட்பட உதயநிதி ஸ்டாலின், சிம்பு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக வந்தனர். கமல்ஹாசனின் இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. சமீபகாலமாக காதலருடன் ஊர் சுற்றிலும் பப் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்பாவின் படத்திற்கு வராமல் இருக்க என்ன காரணம். எதாவது பிரச்சனையா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டும் வருகிறார்கள்.

நேற்று இரவு ஸ்ருதி ஹாசன் சோகத்தில் இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார். அதில் ஏன் சோகம், என்ன ஆச்சி உங்களுக்கும் அப்பாவுக்கு? என்று கேட்டு வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.